பாபர் அஸாம், ஷஹீன் ஷா அப்றிடி சிறந்த ஆற்றல் வெளிப்பாடுகள்; நியூஸிலாந்துடனான ரி20 தொடரை சமப்படுத்தியது பாகிஸ்தான்

Published By: Vishnu

29 Apr, 2024 | 02:23 AM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்றுவந்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் 2 - 2 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது.

லாகூர், கடாபி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற தீர்மானம் மிக்க 5ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 9 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தியது.

இப் போட்டியில் அணித் தலைவர் பாபர் அசாம் குவித்த அரைச் சதம், பக்கார் ஸமானின் சிறப்பான துடுப்பாட்டம், ஷஹீன் ஷா அப்றிடியின் துல்லியமான பந்துவீச்சு என்பன பாகிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டதுடன் 2ஆவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து வெற்றிபெற்று 2 - 1 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் சய்ம் அயூப் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தபோதிலும் ஏனையவர்கள் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

பாபர் அஸாம், உஸ்மான் கான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 73    ஓட்டங்களைப்   பகிர்ந்து அணியை சிறந்த நிலையை நோக்கி நகர வைத்தனர்.

உஸ்மான் கான் 24 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் பாபர் அஸாம் மற்றொரு இணைப்பாட்டத்தில் பங்காற்றினார்.

பக்கார் ஸமானுடன் 3ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த பாபர் அஸாம் 44 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

இப்திகார் அஹ்மத் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் அவரைத் தொடர்ந்து பக்கார் ஸமான் 43 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஷதாப் கான் 15 ஓட்டங்களுடனும் இமாத் வசிம் 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ஐவர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரம் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ஆரம்ப வீரர் டிம் சீஃபேர்ட் 33 பந்துகளில் 52 பந்துகளையும் அணித் தலைவர் மைக்கல் ப்றேஸ்வெல் 23 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் ஜொஷ் க்ளாக்சன் 26 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

மிகத் துல்லியமாக பந்துவீசிய ஷஹீன் ஷா அப்றிடி 4 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் உஸாமா மிர் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் பாகிஸ்தான் 8 பேரை பந்துவீச்சில் பயன்படுத்தியிருந்தது.

ஆட்டநாயகன்: ஷஹீன் ஷா அப்றிடி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56