மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த சுமார் 200 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்க நாடுகளிலிருந்து, ஐரோப்பாவிற்கு இரண்டு படகுகள் மூலம் அகதிகளாக பயணித்த சுமார் 200 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படகு கவிழ்ந்த விடயம் கேள்வியுற்று விபத்து பகுதிக்கு வந்துள்ள இத்தாலிய கடலோர பாதுகாப்புப்படையினர் இதுவரை உயிரிழந்துள்ள 5 பேரின் உடல்களை மட்டுமே மீட்டுள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் அறிவித்துள்ளனர்.

அத்தோடு இவ்வருடம் மாத்திரம் குறித்த மத்திய தரைக்கடல் வழியாக, சுமார் 21000 அகதிகள் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 5000 பேர்வரையில் இத்தாலிய கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பயணிக்கு குடியேற்றவாசிகள், துருக்கி மற்றும் கிரீஸ் இடையே பயணிக்கும் போது ஏற்படும் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து உயிரிழக்கவேண்டியுள்ளதாக குறித்த கடற்பிராந்திய காவல்படையினர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.