காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

Published By: Vishnu

28 Apr, 2024 | 05:54 PM
image

காணாமலாக்கப்பட்ட தனது மகன் உயிரோடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது எனவும் நோயுற்றுள்ள தனக்கு அரசாங்கத்தினால் நஷ்ட ஈடுகளை தந்து உதவுமாறு தாய் கவலையுடன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு கரடியனாறு பகுதியில் எனது மகன் காணாமல் போயுள்ளார் இதுவரை காலமும் நான் தேடித் திரிகின்றேன். இன்று வரை உரிய பதில்  கிடைக்கவில்லை. இனி அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது. நோயுற்றுள்ள எனக்கு அரசாங்கத்தால் நஷ்ட ஈடுகளை தந்து உதவுவதன் மூலம்  வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியும் என தனது மகன் உயிரோடு இருந்ததால் தன்னை நன்றாக பார்த்திருப்பார் என்று காணாமலாக்கப்பட்ட மகன் ஒருவரின் தாய் கவலையுடன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் சனிக்கிழமை (27) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மன்முனை வடக்கு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட 34 காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது கொழும்பிலிருந்து வருகைதந்த காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமலாக்கப்பட்டோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய கிளைக்கு நேரில் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:04:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 14:51:37
news-image

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில்...

2025-03-18 13:11:10