அமெரிக்காவில் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய துஷாரி ஜெயக்கொடி வெற்றி பெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை (28) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
37 நாடுகள் பங்கேற்ற இந்த உலக அழகி போட்டியானது இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
37 நாடுகளிலிருந்து உலக அழகிகளுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவியதாகவும் அதில் வெற்றி பெற்றது இலங்கைக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் எனவும் துஷாரி ஜெயக்கொடி தெரிவித்துள்ளார் .
இவர் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் இலங்கையில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் வெற்றி பெற்று, இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM