சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பாகச் செயற்படும் தலைமை அதிகாரிகளில் திறமையற்றவர்களுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சிறைச்சாலைகளின் முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது இது தொடர்பில் ஆரயாப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அத்தியட்சகர்கள், அத்தியட்சகர்கள், உதவி அத்தியட்சகர்கள் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர் சூம் தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
சிறைச்சாலைகள் தொடர்பில் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பில் தனித்தனியாக கலந்துரையாடப்பட்டதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திறமையற்ற அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் கூறின.
அவர்கள் பணிபுரியும் சிறைச்சாலைகளில் மீண்டும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அந்தச் சிறைகளிலிருந்து மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM