பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘ஸ்வஷக்தி’ என்ற ஒரு மில்லியன் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடன் விண்ணப்பப் பத்திரங்களுக்கான கடன் தொகைகளை ஹற்றன் நஷனல் வங்கி இன்று வினியோகம் செய்தது.
இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள ஸ்வஷக்தி வேலைத் திட்டத்தில் இலங்கையின் பல்வேறு வங்கிகள் பங்குபற்றியுள்ளன. அவற்றுள், ஹற்றன் நஷனல் வங்கியே முதன்முதலாக கடன் தொகைகளை வினியோகிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுயதொழிலுக்காக கடன் விண்ணப்பப் பத்திரங்களை அனுப்பியுள்ளனர். அவற்றில், இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகளே பெருமளவிலான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன.
எவ்வாறெனினும், இதுவரை எந்தவொரு வங்கியும் விண்ணப்பதாரிகளுக்கான கடன் தொகையை வினியோகிக்கவில்லை.
மத்திய திட்ட கண்காணிப்புப் பிரிவு, தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் மூலமாகவே இத்தரவுகள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM