இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

3 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டபோது கோஹ்லியின் வலது தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கோஹ்லியின் உடல் நிலை 100 சதவீதம் குணமடைந்த பிறகே அவர் விளையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று அல்லது நாளை கோஹ்லி விளையாடுவது தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் எள இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.