மே தினத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு : பொது கூட்டணியில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

28 Apr, 2024 | 09:44 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் மே தின மேடையில் ஏறவுள்ளதாக ஐ.தே.க தெரிவித்தது.  

வருட இறுதிக்குள் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளமையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும்  பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளை கடந்த வாரத்தில் சந்தித்திருந்த ஜனாதிபதி உத்தேச தேர்தல் மற்றும் அரசியல் கூட்டணி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் பஷில் ராஜபக்ஷ, பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் டிரான் அலஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். 

ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் இதன்போது முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இதனை மையப்படுத்தியே ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்க ஏனைய கட்சிகளுக்கு முதல் கட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் புதன்கிழமை (மே 01) 2 மணிக்கு  கொழும்பு - மருதானை பகுதியில் இடம்பெறவுள்ளது. 

சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஐ.தே.க.,வின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார  தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு பிறகு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் ஜனாதிபதியாக மே தின கூட்டத்தில் பங்கேற்கின்றார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பங்கேற்கும் கட்சிகளுடன் உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22