(நெவில் அன்தனி)
டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று (27) நடைபெற்ற இந்த வருடத்திற்கான 43ஆவது இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸை 10 ஓட்டங்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிகொண்டது.
கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 258 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 5 தடவைகள் சம்பியனான மும்பை இந்த வருடம் 9 போட்டிகளில் அடைந்த 6ஆவது தோல்வி இதுவாகும்.
மும்பை இண்டியன்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பவர் ப்ளேயில் ரோஹித் ஷர்மா (8), இஷான் கிஷான் (20), சூரியகுமார் யாதவ் (26) ஆகியோர் ஆட்டம் இழக்க மும்பை இண்டியன்ஸ் 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எனினும் திலக் வர்மா, அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினர்.
ஹார்திக் பாண்டியா 24 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து நெஹால் வதிரா 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.
திலக் வர்மாவும் டிம் டேவிடும் 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். (210 - 6 விக்)
டிம் டேவிட் (37), மொஹமத் நபி (7) ஆகிய இருவரும் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
திலக் வர்மா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும் கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ஓட்டங்களை எடுக்க முயற்சித்து ரன் அவுட் ஆனார்.
அவர் 32 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ராசிக் சலாம் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முக்கேஷ் குமார் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கலீல் அஹ்மத் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது.
ஜேக் ப்ரேசர் மெக்கேர்க், அபிஷேக் பொரெல் ஆகிய இருவரும் 45 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஜேக் ப்ரேசர் மெக்கேர்க் 27 பந்துகளில் 11 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களை விளாசி முதலில் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து அபிஷேக் பொரெல் 36 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
அதன் பின்னர் சாய் ஹோப், அணித் தலைவர் ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில 24 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
சாய் ஹோப் 17 பந்துகளில் 5 சிக்ஸ்களுடன் 48 ஓட்டங்களைக் குவித்தார்.
4ஆவது விக்கெட்டில் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸுடன் மேலும் 55 ஓட்ங்களைப் பகிர்ந்த ரிஷாப் பான்ட் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 48 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM