(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள ஷெய்க் ஸய்யத் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஸிம்பாப்வே அணிக்கு எதிரான பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வனாட்டு தலைகீழ் வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது.
இந்தப் போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்ட வனாட்டு மகளிர் அணி சிறப்பாக பந்துவீசி ஸிம்பாப்வே மகளிர் அணியை வெறும் 61 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.
மகளிர் சர்வதேச ரி20 போட்டி வரலாற்றில் ஸிம்பாப்வே பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
ஸிம்பாப்வே அணியில் மூவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். 13 உதிரிகளே இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
வனாட்டு மகளிர் அணியில் ரஷேல்அண்ட்றூ, வனிசா விரா, நசமானா நவைக்கா ஆகிய மூவரும் மிகத் துல்லியமாக பந்துவிசி எதிரணியை பிரம்மிப்பில் ஆழ்த்தினர்.
குறிப்பாக ரஷேல் அண்ட்றூ, யோக்கர் பந்துகளை வீசி 2 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் வனிசா விரா 3 விக்கெட்களையும் நசமானா நவைக்கா 4 விக்கெட்களையும் வீழ்த்தி பந்துவீச்சில் அசத்தினர்.
குறைந்த மொத்த எண்ணிக்கையான 62 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வனாட்டு மிக நிதானத்துடன் வெற்றி இலக்கை கடந்தது.
வனாட்டுவின் வெற்றி வலுவாக ஒலிக்கிறது
வனாட்டுவின் இந்த வெற்றி உலகெங்கும் வலுவாக ஒலிக்கிறது என அதன் பயிற்றுநர் ஜொஷுவா ராசு தெரிவித்தார்.
வனாட்டு மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக வாசு பொறுப்பேற்று ஒரு மாதம் கழித்து கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கிழக்கு ஆசிய - பசுபிக் தகுதிகாண் சுற்றில் வனாட்டு அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி சம்பியனாகி இருந்தது.
அப்போது அணியை சுமாராகப் பாராட்டிய வாசு, இம்முறை அணியின் வரலாற்று வெற்றி போற்றத்தக்கது என்றார்.
'மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் அறிமுக அணியாக ஸிம்பாப்வேயை எதிர்கொள்வது கடினமாகத் தோன்றியது. ஆனால், அவர்களால் ஈட்டப்பட்ட இந்த வெற்றியானது அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை பறைசாற்றுகிறது. பலவீனர்கள் என்ற பட்டத்துடன் களம் இறங்கிய எமது அணியில் புது முகங்ககளும் இடம்பெற்றார்கள். அவ்வாறான சூழ்நிலையிலும் இந்த அணி ஓர் இறுக்கமான குடும்பமாக போராட்டக் குணத்துடன் வெற்றி பெற்றதைக் காணக் கிடைத்தது மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது' என்றார் அவர்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நெருக்கடிகளை எதிர்கொள்வது ராசுவைப் பொறுத்தமட்டில் புதியதல்ல. ஏனெனில் அவர் வனாட்டு தேசிய அணியின் சமகாலத் தலைவராவார்.
பயிற்றுநர்கள் இல்லாமலேயே பயிற்சிபெற்றவர்கள்
தனது அணியில் இடம்பெறும் அதிசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் செலினா சோல்மனின் விடாமுயற்சியையும், ஆடுகளத்திலும் ஆடுகளத்திற்கு வெளியேயும் அணிக்கு உந்துசக்தியாக அவர் திகழ்வதையும் ராசு பாராட்டினார்.
'இந்த பெண்களுடன் இது ஒரு நம்பமுடியாத பயணமாகும். ஆரம்பத்தில், செலினாவின் மன உறுதியை நம்பி பயிற்றுநர்கள் இல்லாமலேயே பயிற்சி பெற்றனர். அவர்களின் அர்ப்பணிப்புத்தன்மை ஒவ்வொரு பயிற்சியின்போதும் தெளிவாகத் தெரிந்தது. நான் பயிற்சியாளராக பதவியேற்ற பின்னர் வெற்றி பெறுவதற்கான அவர்களின் ஆற்றல்களால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.
'நான் அவர்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன், மேலும் அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். உலக அளவில் 11ஆவது இடத்தில் உள்ள பப்புவா நியூ கினிக்கு எதிரான பிராந்திய தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றது எமது அணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
'அவர்கள் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பரிணாம வளர்ச்சியடைந்து, நாட்டிற்கான சிறந்த தூதுவர்களாக மாறியுள்ளனர்.' எனவும் ராசு தெரிவித்தார்.
இந்த அணி எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
ஸிம்பாப்வே 13.3 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 61 (ஷார்னி மேயர்ஸ் 16, சிப்போ முகேரி டிரிபானோ 11, ஜொசப்பின் நிக்கோமோ 10, உதிரிகள் 13, நசிமானா நவைக்கா 13 - 4 விக்., வனிசா விரா 14 - 3 விக்., ரஷேல் அண்ட்றூ 10 - 2 விக்.)
வனாட்டு 16.3 ஓவர்களில் 62 - 4 விக். (நசிமானா நவைக்கா 21, வெலென்டா லங்கியாட்டு 13, அல்வினா ச்சிலியா 10 ஆ.இ., ஓட்றி மாஸ்விஷாயா 10 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM