2 கிலோ மீற்றர் தூரம் நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

27 Apr, 2024 | 10:30 AM
image

பொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் கால்வாயொன்றில் தவறி விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம்  நீரில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று வெள்ளிக்கிழமை (26) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வெலிகந்த  பகுதியை சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குழந்தையின் தாய் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகக் குழந்தையை மூத்த மகளிடம் ஒப்படைத்துள்ளார். இதன்போது குழந்தை வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த கால்வாயில் தவறி வீழ்ந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. 

இதனைக் கண்ட வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள தனியார் நெல் ஆலையொன்றின் ஊழியர் ஒருவராலும்  அங்குள்ள சிலராலும், குழந்தை மீட்கப்பட்டு அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் குழந்தையை வெலிகந்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், குழந்தையின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குழந்தை நீரில் அடித்து செல்லப்பட்ட வேளை, குழந்தையின் தந்தை தோட்டத்திற்குப் பின்புறம் உள்ள மாட்டுப் பண்ணையிலிருந்ததாகவும் மூத்த சகோதரி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள்...

2026-06-13 13:53:19
news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45