(நெவில் அன்தனி)
மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார்.
17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார்.
பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார்.
மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல் ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர்.
ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை மலேசிய வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் சீனாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும் சர்வதேச ரி20 கிரிக்கெட் உலக சாதனையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM