(நெவில் அன்தனி)
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண தூதுவராக இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் யுவ்ராஜ் சிங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்துள்ளது.
ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம் நடைபெற 36 நாட்கள் உள்ள நிலையில் யுவ்ராஜ் சிங்குக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கேல், ஜெமெய்க்காவின் மின்னல் வேக ஓட்ட வீரரும் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்கள் வென்றவருமான யூசெயன் போல்ட் ஆகியோருடன் முதலாவது தூதுவர்கள் குழுவில் யுவ்ராஜ் சிங் இணைகிறார்.
தென் ஆபிரிக்காவில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டுவர்ட் ப்றோட் வீசிய 19ஆவது ஓவரில் 6 சிக்ஸ்களை யுவ்ராஜ் சிங் விளாசியிருந்தார்.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வெற்றிகொண்ட இந்தியா முதலாவது ரி20 உலகக் கிண்ண சம்பியனாகியிருந்தது.
ரி20 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரும் போட்டிகளின்போதும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கிண்ண விளம்பர நிகழ்ச்சிகளில் யுவ்ராஜ் சிங் கலந்து கொள்வார். குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நியூயோர்க்கில் ஜூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ள லீக் போட்டியின்போதும் அவர் விளம்பர நிகழ்ச்சியில் பங்கபற்றுவார் என ஐசிசி அறிவத்துள்ளது.
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2007இல் உலக சாம்பியனான இந்திய அணியில் இடம்பெற்ற யுவராஜ் சிங் கருத்து வெளியிடுகையில், 'ஒரு ஓவரில் 6 சிக்ஸ்கள் அடித்தது உட்பட நினைவில் கொள்ளக்கூடிய விடயங்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்துதான் வந்தன. எனவே, ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் பங்காளியாக இருப்பது உற்சாகத்தை தருகிறது' என்றார்.
'கிரிக்கெட் விளையாடுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் சிறந்த இடமாகும். அங்கு செல்லும் ரசிகர்கள் போட்டிகளின்போது ஆரவாரம் செய்து வீரர்களை ஊக்குவிப்பது அப் பகுதியில் தனித்துவமான சிறப்பம்சமாகும். அதேவேளை, அமெரிக்காவுக்கும் கிரிக்கெட் விஸ்தரிக்கப்படுகிறது. ரி20 கிரிக்கெட்டின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன' என யுவ்ராஜ் மேலும் கூறினார்.
'நியூயோர்க்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவது என்பது இந்த வருடம் உலகின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இருக்கும். எனவே, புதிய விளையாட்டரங்கில் உலகின் தலைசிறந்த வீரர்கள் விளையாடுவதைக் காணக்கிடைப்பது பாக்கியமாகும்' என அவர் குறிப்பிட்டார்.
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை நடைபெறும்.
இணை வரவேற்பு நாடான ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ஆரம்பப் போட்டி டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி விளையாட்டரங்கில் நடைபெறும.
இம்முறை 20 அணிகள் பங்குபற்றுவதுடன் மொத்தம் 55 போட்டிகள் 9 மைதானங்களில் நடைபெறும். இறுதிப் போட்டி பார்படோஸில் ஜூன் 29ஆம் திகதி நடைபெறும்.
நசௌ கவுன்டி சர்வதேச விளையாட்டரங்கில் ஜூன் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது வரலாற்று முக்கியம் வாய்ந்த ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 2014 உலக சம்பியன் இலங்கையை தென் ஆபிரிக்கா எதிர்த்தாடும்.
மேலும் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள 8 போட்டிகளில் 10 அணிகள் விளையாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM