கிளி­நொச்சி, கரைச்சி பிர­தேச செய­லக விளை­யாட்டு விழாவில் கன­­புரம் விளை­யாட்­டுக்­­ழகம் முத­லா­வது இடத்­தினை பெற்று சம்­பி­­னா­னது.

வரு­டந்­தோறும் பதிவு செய்­யப்­பட்ட விளை­யாட்டுக் கழ­கங்­­ளுக்­கி­டையில் நடைபெறுகின்ற விளை­யாட்டு விழா இம் முறை கிளி­நொச்சி கன­­புரம் விளை­யாட்டு மைதா­னத்தில் நடைபெற்றது.

கரைச்சி பிர­தேச செய­லாளர் கோ. நாகேஸ்­வரன் தலை­மையில் இடம்­பெற்ற இந்நிகழ்வில் பதி­வு­செய்­யப்­பட்ட கழ­கங்­களைச் சேர்ந்த விளை­யாட்டு வீரர்கள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.

குறிப்­பாக ஜெயந்­தி­நகர் மகா­தேவா சைவ சிறார் (குரு­குலம்) இல்ல மாண­வர்­களும் மகா­தேவா விளை­யாட்­டுக்­­ழகம் மூலம் விளை­யாட்­டுப்­போட்­டி­களில்  பங்­கு­கொண்டு பல போட்­டி­களில் வெற்­றி­பெற்­றனர்.

நிகழ்வில் முதன்மை விருந்­தி­­ராக கலந்­து­கொண்ட கிளி­நொச்சி மாவட்ட மேல­திக அரச அதிபர் சி. சத்­தி­­சீலன் கருத்து தெரி­விக்­கையில், கிளி­நொச்சி மாவட்டம் விளை­யாட்­டுத்­து­றையில் மேலும் வள­­வேண்டும்.

கடந்த ஆண்டு இடம்­பெற்ற வடக்கு மாகாண மட்ட விளை­யாட்டுப் போட்­டியில் கிளி­நொச்சி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்­டதுஆனால் இவ்­­ருட போட்­டியில் அதை தாண்டி வர­வேண்டும் எனத் தெரி­வித்த அவர் கிளி­நொச்­சி­யி­லி­ருந்து தேசிய சாத­னை­களை நிலை­நாட்­டவும் சர்­­தேச போட்­டி­களில் பங்கும் கொள்ளும் அளவிலும் போட்­டி­யா­ளர்கள் வளர்ந்துள்ளனர்.

ஆனாலும் விளை யாட்டில் மேலும் வளர வேண்டும். நாம் அதற்காக எம்மால் முடிந்த உதவிகளைசெய்வோம் என்றார்.