(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையை கண்டறிய வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். விசேட பொறிமுறை ஊடான விசாரணைகள் ஊடாகவே உண்மையை கண்டறிய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் 300 பேர் உயிரிழந்தார்கள். 500 பேர் படுகாயமடைந்தார்கள். ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இதுவரை உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை. நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை.உண்மையை கண்டறிவதற்காக விசேட பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
1948ஆம் ஆண்டு 14ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். முறையான விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பும், சர்வதேச தரப்பினரது கண்காணிப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
உள்ளக விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதொன்றும் புதிதல்ல உதலாகம ஆணைக்குழு விசாரணைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது. நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்புடன் விசேட பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
விசேட பொறிமுறை ஊடான விசாரணைகள் பரந்துப்பட்ட வகையில் காணப்பட வேண்டும். அவ்வாறான நிலையில் கிடைக்கப்பெறும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM