ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு

24 Mar, 2017 | 10:32 AM
image

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் தொடங்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களையும் விரைவில் வெளியிடவுள்ளனர். 

ஏற்கெனவே ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசர், சிங்கிள், புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. படத்தின் வெளியீட்டையும் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்க்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right