(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எமது பக்கத்தில் இருந்து ஆளும் தரப்புக்கு சென்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்று 5 மாதங்களாகியும் இதுவரை தீர்ப்பு வழங்காமல் இருப்பதன் மூலம் உயர் நீதிமன்றம் அரசியலமைப்பை மீறியுள்ளது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்த ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்ற எதிர்க்கட்சியில் இருக்கும் ஆளும் கட்சிக்கு சென்ற இரண்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை விசாரணை செய்த 3 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் வழக்கு தீர்ப்பை எழுதி இருக்கிறார்கள் என்றே தெரிவித்தேன். வழக்கு தீர்ப்பு என்ன என தெரிவிக்கவில்லை.
வழக்கு தொடுக்கப்பட்டால் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து 2 மாதங்களில் அதன் தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் தொடுத்திருக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 5 மாதங்கள் ஆகியுள்ளன. அதனால் தீர்ப்பு எதுவானாலும் தீர்ப்பை வழங்குமாறு 3ஆவது நீதிபதிக்கு தெரிவிக்கிறோம். அதனை தெரிவிக்கும் அதிகாரம் எமக்கு இருக்கிறது.
அத்துடன் குறித்த வழக்கில் 2 நீதிபதிகள் வழக்கு தீர்ப்பை எழுதி இருப்பதாக குறித்த வழக்குக்காக முன்னிலையாகி இருக்கும் எமது சட்டத்தரணிகள் எமக்கு தெரிவித்திருக்கின்றனர். அதேபோன்று புதுக்கடையில் இருக்கும் அனைத்து சட்டத்தரணிகளுக்கும் இது தெரியும். அதேபோன்று இந்த வழக்கு தீர்ப்பை வழங்குமாறு பிரதம நீதியரசரும் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் குறித்த நீதிபதி அதனை செய்யாமல் இருக்கிறார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM