(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில்,
பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன?
சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன்.
சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM