சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மலேசிய பொலிஸ் சேவையின் 210 ஆவது ஆண்டு விழாவில் கலந்துக்கொள்ள மலேசியா சென்றிருப்பதால், அவரின் இடத்துக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.