நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு முயற்சி வழக்கு ஒத்திவைப்பு

Published By: Digital Desk 3

26 Apr, 2024 | 04:03 PM
image

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

அதன் போது , நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக அக்காலத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் மன்றில் தோன்றி சாட்சியமளித்தார். 

அதன் போது, உங்கள் கைத்துப்பாக்கியை அடையாளம் காட்ட முடியுமா ? என அரச சட்டவாதி சாட்சியிடம் கேட்ட போது, "ஆம்" என பதிலளித்தார். 

ஆனால் குறித்த துப்பாக்கியை சாட்சி அடையாளம் காட்ட துப்பாக்கி மன்றில் இருந்திருக்கவில்லை. கைத்துப்பாக்கியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்ட நிலையில், அது மீள பெறப்படவில்லை என்பது தெரியவந்தது. 

அதனை அடுத்து, பிரதான சான்று பொருள் இல்லாது, விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என தெரிவித்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி ஒத்திவைத்தார். 

அத்துடன் அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் இருந்து கைத்துப்பாக்கியை மீள பெற்று, சான்று பொருளாக மன்றில் அதனை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி கட்டளையிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2016 பின் அரச சேவையில் இணைந்த...

2026-03-10 18:45:19
news-image

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் மீது...

2026-03-10 18:03:54
news-image

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக...

2026-03-10 17:50:29
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான...

2026-03-10 17:53:16
news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26