(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு மிகவும் பிரமாண்டமான முறையில் இளையோருக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை அகில இலங்கை ரீதியில் நடத்தி கால்பந்தாட்டத்தில் புதிய யுகம் படைக்க இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் உறுதிபூண்டுள்ளது.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத் தலைவர் ஷெய்க் சலமான் பின் இப்ராஹிம் அல் கலிபாவினால் இளையோர் கால்பந்தாட்ட லீக் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
'இலங்கை கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவோம்' என்ற உறுதிப்பாட்டுடன் 'யூத் நைன்டீன்' (இளையோர் 19) லீக்கை அவர் ஆரம்பித்துவைத்தார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் கால்பந்தாட்ட இல்ல கேட்போர்கூடத்தில் இந்த வைபவம் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
அங்கு பேசிய ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத் தலைவர் ஷெய்க் சலமான் பின் இப்ராஹிம் அல் கலிபா,
'இலங்கையில் கால்பந்தாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எடுத்து வரும் உறுதியான மற்றும் இலட்சியங்களை நோக்கிய திட்டங்களை நோக்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
'ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனம் (AFC) மற்றும் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் (FIFA) ஆகியவற்றின் மிகச்சிறந்த ஆளுமை கொள்கைகளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்றுக்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அத்துடன் ஜஸ்வர் உமர் தலைமையில் சம்மேளன உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் ஒற்றுமையுணர்வு உண்மையில் பாராட்டுக்குரியது. ஆளுமையின் ஸ்திரத்தன்மைக்கான இந்த கூட்டு முயற்சிகள் இலங்கை கால்பந்தாட்டத்திற்கு பெரிதும் பயனளிக்கும் என நான் நம்புகிறேன்' என குறிப்பிட்டார்.
புதிதாக அறிமுகமாகும் இந்த இளையோர் லீக் கால்பத்தாட்டப் போட்டி நாடு முழுவதும் நடைபெறுவதால் இப் போட்டி தேசிய இளையோர் கால்பந்தாட்ட லீக் எனவும் அழைக்கப்படுகிறது.
'U-19' என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தக் கால்பந்தாட்டப் போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 400 மேற்பட்ட கழகங்களின் 19 வயதுக்குட்பட்ட அணிகள் பங்குபற்றவுள்ளன.
இப் போட்டிகள் 55 நகரங்களில் நடைபெறவுள்ளதுடன் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாலா திசைகளிலிருந்தும் 11,000க்கும் மேற்பட்ட இளம் வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்கள் வெளிப்படுத்தப்படவுள்ளது
இந்த சுற்றுப் போட்டி சுமார் 3 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் லீக் சுற்று முடிவடைந்த பின்னர் முன்னிலை வகிக்கும் கழகங்கள் 4 குழுக்களில் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
இந்த சுற்றுப் போட்டியை நடத்துவதற்கான திட்டத்தையும் இலங்கை கால்பந்தாட்டத்தின் வளர்ச்சியை நோக்கிய வியூகங்களையும் வகுத்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வரின் முயற்சிகளை ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலிபா எழுத்து மூலம் பாராட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கை கால்பந்தாட்ட வளர்ச்சியை முன்னிட்டு சம்மேளனத்துடன் நெருக்கமாக செயற்படுவதாகவும் சம்மேளனத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலிபா உறுதி வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM