பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (22) காலை ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது.

70 நாட்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாத காரணத்தினால் குறித்த உண்ணாவிரத போராட்டத்தை இவர் நேற்று முன்தினம் ஆரம்பித்தார்.

இந்நிலையில் நேற்று மூன்று வேளை உணவை விடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விமல் இன்று நீரை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதேவேளை விமல் வீரவன்சவின் மகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமலின் மகள் மேற்கொண்ட விமலின் மகள் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக லேடி ரிட்ஜ்வே வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.