உலக பொருளாதாரப்பேரவையின் விசேட கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு

Published By: Vishnu

26 Apr, 2024 | 01:18 AM
image

(நா.தனுஜா)

உலக பொருளாதாரப்பேரவையின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவுதி அரேபியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

உலக பொருளாதாரப்பேரவையின் ஏற்பாட்டில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் எதிர்வரும் 28 - 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இவ்விசேட கூட்டமானது உலகளாவிய ரீதியில் பல்துறைசார் பிரதிநிதிகளையும், தொழிற்துறை தலைவர்களையும் ஒன்றிணைக்கும் எனவும், உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டிய சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.

 இவ்விசேட கூட்டத்தில் 'நகர்ப்புற எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல்' மற்றும் 'வடக்கிலிருந்து தெற்கு - கிழக்கிலிருந்து மேற்கு: நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புதல்' ஆகிய தலைப்புக்களில் நடைபெறவுள்ள இரு அமர்வுகளில் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்.

 அதேவேளை இவ்விஜயத்தின்போது சவுதி அரேபியா மற்றும் ஏனைய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அலி சப்ரி இருதரப்பு சந்திப்புக்களையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி ரியாத்தில் வாழும் இலங்கையர்களையும் அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59
news-image

ரணிலை காட்டிலும் அநுர அடிபணிந்துள்ளார் -...

2024-12-09 17:07:33
news-image

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக...

2024-12-09 19:33:14
news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22