இலங்கைக்கான நியூஸிலாந்துக்கான உயர்ஸ்தானிகராலயத்தை கொழும்பில் திறக்கவுள்ளதாகவும், இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுப்படும் என்றும் நியூஸிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் முரே மெக்கலி கூறினார்.
“உள்நாட்டுப் போரால் ஒரு தலைமுறை இடைவெளியின் பின் இலங்கை மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. இலங்கையின் இந்த முயற்சிக்கு அரசியல் ரீதியாகவும் விரிவாக்கப்பட்ட பொருளாதார ரீதியாகவும் உதவ நியூஸிலாந்து விரும்புகிறது. பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் இலங்கையில் பாற்பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
“இந்த நிலையில், நியூஸிலாந்திடம் இருந்து பாற்பொருட்கள் மற்றும் விவசாயத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள இலங்கை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நியூஸிலாந்தில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவும் அதிகரித்து வருகிறது.
“இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகராலயத்தை ஆரம்பிப்பது காலோசிதமான முயற்சியாக இருக்கும்.”
இவ்வாறு முரே மெக்கலி தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான நியூஸிலாந்தின் வரவு-செலவுத் திட்டத்தில், இலங்கையில் உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை அமைப்பதற்காகவும், அதன் அடுத்த நான்கு ஆண்டு காலச் செயற்பாட்டுக்காகவும் முறையே 6.2 மில்லியன் மற்றும் 8.9 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அந்நாட்டரசு ஒதுக்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM