(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி, டொலரன்ஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் தாய்லாந்தை எதிர்த்தாடிய இலங்கை 67 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.
எவ்வாறாயினும் துடுப்பாட்டத்தில் சிறு தடுமாறத்திற்குள்ளான இலங்கை சிறப்பான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு மூலமே கடைசியில் இலகுவாக வெற்றியீட்டியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கைக்கு ஆரம்பத்தில் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.
ஐந்தாவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 24 ஓட்டங்களாக இருந்தபோது விஷ்மி குணரட்ன 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அணித் தலைவி சமரி அத்தபத்து நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 16 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஹன்சிமா கருணாரட்ன (11), கவிஷா டில்ஹாரி (5), ஹாசினி பெரேரா (29) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழக்க இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டது. (78 - 5 விக்.)
இந் நிலையில் நிலக்ஷிகா சில்வாவும் அனுஷ்கா சஞ்சீவனியும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கையை 122 ஓட்டங்களாக உயர்த்தினர்.
நிலக்ஷிகா சில்வா 20 பந்துகளில் 20 ஓட்டங்களுடனும் அனுஷ்கா சஞ்சீவனி 13 பந்துகளில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
தாய்லாந்து பந்துவீச்சில் சனிடா சுத்திருவாங், ஒன்னிச்சா கம்சொம்ஃபு, சுனிடா சத்துரொங்ரட்டனா, சுலீபோர்ன் லவோமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இலங்கையினால் நிர்ணியிக்கப்பட்ட 123 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து மகளிர் அணி 16.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஓரே ஒரு வீராங்கனை மாத்திரமே இரட்டை இலக்கை எண்ணிக்கையைப் பெற்றார். முன்வரிசை வீராங்கனை நன்னாபட் கொன்ச்சரோன்காய் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 18 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் இனோஷி ப்ரியதர்ஷனி 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உதேஷிக்கா ப்ரபோதனி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அவர்களை விட சமிரி அத்தப்பத்து, காவிஷி டில்ஹாரி, அச்சினி குலசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM