முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பாரிய  ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ  கடந்த 16 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்கவிருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அங்கு வருகைத்தரவில்லை.

எனினும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டத்தாபனத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பியதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆஜராகியுள்ளார்.