சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை அதிகரித்தால் அரசாங்கம் மேலும் 40 பில்லியன் ரூபாவை செலுத்த நேரிடும் - நிதி இராஜாங்க அமைச்சர்

25 Apr, 2024 | 07:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை.

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது. 

நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது. 

நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது.

அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மையான தேசிய பிரச்சினையை அறிந்து அவற்றுக்கு...

2025-01-22 16:56:52
news-image

சம்மி சில்வாவிடம் மண்டியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்...

2025-01-22 20:43:28
news-image

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா...

2025-01-22 23:49:25
news-image

ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை...

2025-01-22 16:57:24
news-image

மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண...

2025-01-22 20:19:28
news-image

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

2025-01-22 23:00:13
news-image

கொலன்னாவை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க...

2025-01-22 17:10:47
news-image

சீனாவின் 500 மில்லியன் யுவான் நன்கொடை...

2025-01-22 20:50:37
news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41