(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாவனைக்கு உதவாத அரிசி பாடசாலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் உணவு வேலைத்திட்டத்துடன் தொடர்புடையது அல்ல என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களின் உபயோகத்துக்கான பாவனைக்கு உதவாத அரிசி உலக உணவு வேலைத் திட்டத்தின் ஊடாக மேலதிகமாக வழங்கப்பட்ட ஒரு தொகை அரிசியாகும். அந்த அரிசியை கல்வியமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் உணவு வேலைத் திட்டத்துடன் இணைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.
கல்வி அமைச்சின் நிதியை செலவிட்டு பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற ஒவ்வாத உணவு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் உணவு, அந்தந்த மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்புக்கு அடிக்கடி உட்படுத்தப்படுகிறது.
இந்த முறைமையின் கீழே பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 110 ரூபா பெறுமதியான ஒரு வேளை உணவு பாடசாலை மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM