எம்பிலிப்பிட்டிய - பனாமுரே பகுதியில்  ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கலால் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நடத்திய விசேட சோதனையின் போது குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வீட்டை சோதனைக்குற்படுத்திய போதே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.