இரு பெண்களுடன் இணைந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற இளைஞர் ஒருவர் மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துக் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (24) கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய தினேஷ் ஹேமந்த என்ற இளைஞராவார்.
இவர் கடந்த 19 ஆம் திகதி சிவனொளிபாத மலையின் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், நேற்று (24) சிவனொளிபாத மலைக்கு அருகில் உள்ள நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ராஜமலை பகுதியில் வைத்து தோட்டத் தொழிலாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM