(நெவில் அன்தனி)
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண போட்டிக்கான சிறப்பு தூதுவராக ஒலிம்பிக் ஜாம்பவான் யுசெயன் போல்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இளம் புதிய தலைமுறை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பை ஐசிசி விடுத்துள்ளது.
உலக மெய்வல்லுநர் போட்டிகளில் அவர் நிலைநாட்டிய சாதனைகள் மற்றும் அவரது அளவற்ற திறமைகளைக் கௌரவிக்கும் வகையில் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவரை சிறப்பு தூதுவராக அறிவித்தது மிகவும் பொருத்தமாகும்.
2008 பெய்ஜிங், 2012 லண்டன், 2016 ரியோ ஆகிய மூன்று ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தொடர்ச்சியாக ஆண்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை (ஆறு தங்கங்கள்) யுசெய்ன் போல்ட் வென்றிருந்தார்.
அத்துடன் 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டு தடவைகள் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இதனைவிட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 9.58 செக்கன்களிலும் 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 19.19 செக்கன்களிலும் ஓடிமுடித்து புதிய உலக சாதனைகளை நிலைநாட்டினார்.
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டது குறித்து யுசெய்ன் போல்ட் கூறியதாவது:
'கிரிக்கெட் விளையாட்டுக்கு எனது இதயத்தில் எப்போதும் விசேட இடம் இருக்கிறது. ஏனெனில் கரிபியன் மக்களின் வாழ்க்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஓர் அங்கமாக இருக்கிறது. ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு என்னை தூதுவராக நியமித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. பல்வேறு விளையாட்டுக்களில் பிரசித்திபெற்று விளங்கும் ஐக்கிய அமெரிக்காவில் கிரிக்கெட் கொண்டுவரப்படுவது மிகவும் நல்ல விடயமாகும். இது 2028 லொஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கு வெகுவாக உதவும்' என்றார்.
ஒரு தூதராக, இந்த நிகழ்வை ஊக்குவிப்பதில் போல்ட் முக்கிய பங்கு வகிக்கவுள்ளார். ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் உத்தியோகபூர் கீதத்தின் இசைவீடியோ அடுத்த வாரம் வெளியிடப்படும்போது சோன் பால் மற்றும் கெஸ் ஆகிய கலைஞர்கடன் யுசெய்ன் போல்ட் மேடையில் தோன்றவுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளில் ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அவர் கலந்துகொள்வார், மேலும் அமெரிக்காவில் விளையாட்டை ஊக்குவிக்கும் ரசிகர்களின் பங்குபற்றலுடனான நிகழ்ச்சிகளிலும் யுசெய்ன் போல்ட் ஒரு பகுதியாக இருப்பார்.
இது இவ்வாறிருக்க, அபு தாபயில் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான சிறப்பு தூதுவராக பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் தலைவர் சானா மிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM