(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எமது பக்கத்தில் இருந்து ஆளும் கட்சிக்கு கட்சி தாவி சென்ற இரண்டு உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்கி தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஒரு நீதிபதி தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறார். அவர் தனது தீர்ப்பை விரைவாக வழங்காவிட்டால் அவரின் பெயரை வெளிப்படுத்துவோம் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச்சட்டத்துக்கு பிரதான எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் எதிர்ப்பில்லை. ஏனெனில் இந்த சட்ட திருத்தம் இதற்கு முன்னரே கொண்டுவந்திருக்க வேண்டும்.
விளக்கு மறியலில் இருக்கும் சந்தேக நபர்கள் தொடர்பில் சில நீதிபதிகள் தீர்ப்பளிக்கும்போது, அவர்கள் விளக்குமறியலில் இருந்த காலத்தை கணக்கிட்டே தீர்ப்பு வழங்குகின்றனர். ஆனால் தற்போது இந்த சட்ட திருத்தம் மூலம் சட்டத்தினால் அது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று வழக்கு தீர்ப்பு வழங்குவது தொடர்பில் சில காலதாமதம் எடுப்பதாக சட்டத்தரணிகள் பலரும் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பாராளுமன்றத்திலும் எமது பக்கத்தில் இருந்த 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி பக்கம் சென்றார்கள். அவர்களை நீக்குவதற்கு வழக்கு தொடுத்திருக்கிறோம். நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டு 2மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தற்போது 3மாதங்கள் கழிந்துள்ளன. ஆனால் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த வழக்கை விசாரணை செய்த 3நீதிபதிகளில் 2 நீதிபதிகள் தீர்ப்பை எழுதியுள்ளனர். ஒருவர் மாத்திரம் சற்று பின்வாங்கி வருகிறார்.
எனவே தீர்ப்பு வழங்குவதில் தள்ளாடிக்கொண்டிருக்கும் நீதிபதி தனது தீர்ப்பை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த தீர்ப்பு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. தீர்ப்பு வழங்காமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.
இந்த வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்து தற்போது 3மாதங்கள் ஆகின்றன. அதனால் இந்த வழக்கு தீர்ப்பை குறித்த நீதிபதி விரைவாக வழங்காவிட்டால் அவரின் பெயரை வெளியிடவேண்டி வரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM