(க.கமலநாதன்)

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் உச்சகட்ட வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.