மதுரை சித்திரை திருவிழா 2024 - ஓர் பார்வை

Published By: Digital Desk 7

24 Apr, 2024 | 05:24 PM
image

உலக அதிசயங்களில் ஒன்றாகவும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக மக்கள் வசித்து வரும் நிலவியல் தளங்களில் ஒன்றாகவும் ஆன்மீக பூமியாகவும் உலகப் புகழ் பெற்றது மதுரை. இந்த மண்ணில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முதன்மையானது. தமிழக பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக பக்தி உணர்வுடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது.

கொடியேற்றம் நடந்தவுடன் எந்த காலப் பருவமாக இருந்தாலும் மதுரை மண்ணில் மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை இந்த முறையும் ஈடேறியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் நடந்த சில நிமிடங்களிலேயே மதுரையில் மழை பெய்தது.

மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21 ஆம் திகதியன்றும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் ஏப்ரல் 23ஆம் திகதியன்றும் வெகு விமரிசையாக நடைபெற்றது.‌

இந்த திருவிழா நடைபெறும் இரண்டு வாரங்களிலும் மதுரை மாநகர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் மதுரைக்கு வருகை தந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேஸ்வரரையும் கள்ளழகரையும் தரிசிப்பது வழக்கம்.

மேலும் இந்த விழா நடைபெறும் 12 நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளையில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் விதவிதமான வாகனங்களில் எழுந்து நான்கு மாட வீதிகளில் உலா வருவார்கள்.‌

தங்க சப்பரத்தில் வீதி உலா, தங்க பல்லக்கில் வீதி உலா, தங்க குதிரையில் வீதி உலா, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், தங்க அம்பாரியுடன் யானையில் வீதி உலா, திருத்தேர், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என இந்த விழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பக்தியுணர்வுடன் சிவசிவா..! என்றும், மீனாட்சி தாயே..! என்றும், சுந்தரேஸ்வரா..! என்றும், கோவிந்தா..! என்றும், அரோகரா..! என்றும் கூவி தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இந்த ஆண்டு அதிகாலை ஐந்து ஐம்பதுக்கு நடைபெற்றது. அப்போது வைகை ஆற்றில் ஏராளமான மக்கள் திரண்டு கள்ளழகரை வணங்கினர்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் நீதி பரிபாலனம் வழங்கும் நீதியரசர்கள் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முன் நின்று அவதானித்து, தேவையான உத்தரவுகளை பிறப்பித்தனர். இதனால் இந்த விழா சீரும் சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் கள்ளழகர் எந்த வண்ணத்தில் பட்டு உடையை உடுத்தி வருகிறார் என எதிர்பார்ப்பதும் பக்தர்களின் வழக்கம். அதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண வைபவத்தின் போது ஆலய வளாகத்தில் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பெண்மணிகள் தங்களின் தாலி சரடுகளை புதுப்பித்துக் கொண்டனர். இந்த நிகழ்வு தமிழக கலாச்சாரத்துடன் இணைந்து அறியப்படுவதால்  ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதனை வியப்புடன் கண்டுகளித்தனர்.

இந்த வைபவத்தின் போது மதுரையில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழ் பெண்மணிகள் இந்த தாலி சரடை மாற்றிக் கொள்ளும் புதுப்பித்துக் கொள்ளும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.‌

தொகுப்பு :சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைகாசி விசாகத்தின் மகிமை 

2024-05-22 14:20:23
news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்

2024-05-22 14:02:32
news-image

மடவல, நலந்தன்ன மலையில் சுடலை மாடன்...

2024-05-16 15:15:32
news-image

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய...

2024-05-12 09:35:40
news-image

புரட்சிக்கவிஞர் பாரதிதாச‌னின் பிறந்தநாளை 'உலகத் தமிழ்...

2024-04-27 19:39:28
news-image

மதுரை சித்திரை திருவிழா 2024 -...

2024-04-24 17:24:26
news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-21 10:26:04
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26