1994ம் ஆண்டு அர்ஜென்டினாவில்இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்பில் இலங்கைக்கு ஈரான் ஜனாதிபதியுடன் விஜயம் மேற்கொள்ளவிருந்த ஈரானின் உள்துறை அமைச்சரை கைதுசெய்யவேண்டும் என ஆர்ஜென்டினா வேண்டுகோள் விடுத்தது எனினும் அந்த அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
1994ம ஆண்டு ஆர்ஜென்டினாவில் தலைநகரில் உள்ள யூத சமூகத்தின் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட வாகன தற்கொலை குண்டுதாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலிற்கு ஈரானின் தற்போதைய உள்துறை அமைச்சர் அஹமட் வஹ்டியே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது
இந்த அமைச்சர் ஈரான் ஜனாதிபதியுடன் பாக்கிஸ்தான் சென்ற பின்னர் இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருந்தார்
இந்த நிலையில் இவரை கைதுசெய்யவேண்டும் என இன்டர்போல் சர்வதேச எச்சரிக்கையொன்றை விடுத்திருந்தது.
ஆர்ஜென்டினாவின் வேண்டுகோளை தொடர்ந்தே இன்டர்போல்; இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது.
இலங்கையும் பாக்கிஸ்தானும் ஈரானின் உள்துறை அமைச்சரை கைதுசெய்யவேண்டும் எனவும் ஆர்ஜெனடினா வேண்டுகோள் விடுத்திருந்தது.
எனினும் அவர் செவ்வாய்கிழமை ஈரானிற்கு சென்றுவிட்டார் என ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கை வந்த ஈரானிய குழுவில் அஹமட் வஹ்டி இடம்பெற்றிருக்கவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஒருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM