(எம்.எப்.எம்.பஸீர்)
மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து அவருக்கு எதிரான பிடியாணை கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டாரவினால் மீளப் பெறப்பட்டது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில், முன்னாள் பிரதியமைச்சர் சரன குணவர்த்தனவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, முதலாவது சாட்சியாளரான படகொட நீதிமன்றத்தில் ஆஜராகாமையால், அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எதுஎவ்வாறு இருப்பினும், இன்று மன்றில் சரணடைந்த, மின்சக்தி அமைச்சின் செயலாளரது சட்டத்தரணி, இந்த விடயம் குறித்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் அமைச்சுக்கு சென்றதாகவும், அதனால் இது பற்றி உரிய முறையில் படகொட அறிந்திருக்கவில்லை எனவும், குறிப்பிட்டார்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான் மின்சக்தி அமைச்சின் செயலாளரை எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM