இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ரோட்டரி கழகத்தின் 2023-2024 மாநாடு எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை ரோட்டரி கழகத்தின் ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் மற்றும் தலைவர் டிஜிஎன்டி குமார் சுந்தரராஜ் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும்.
இந்த மாநாட்டில், இலங்கையில் செயற்படும் 71 ரோட்டரி கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குபற்ற உள்ளனர்.
இம் மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். அதேவேளை, கௌரவ விருந்தினராக ரோட்டரி கழகத்தின் சர்வதேச தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பணிப்பாளர் பெர்ஹோயன் கலந்து கொள்ளவுள்ளார்.
27 ஆம் திகதி மொனாச் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் நடைபெறும் மாநாட்டில் உள்ளூர் மற்றும் சர்வதேசத்தைச் சேர்ந்த பிரபல பேச்சாளர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல பேச்சாளர்களான சேரோசி டி. நந்தசிறி, டடோ பிந்தி ராஜசேகரன், ஹெல்ஜ் அன்டர்சன், பெர்ஹோயன், முர்டசா ஜெபர்ஜி, சனத் மானத்துங்க, அசோக் பீரிஸ், கலாநிதி ராதிகா குமாரசாமி, சார்ஜ்ஸ் தோமஸ் மற்றும் நிலாந்தன் நிருதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM