சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவு பிரதிநிதியும் அமைச்சருமான ஷன் ஹயன் தலைமையிலான குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
இதன் போது தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்திணைக்களத்தின் பிரதி அமைச்சர் ஷன் ஹய்ன் தலைமையிலான குழுவினர் அநுர குமாரவிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் நிலைமை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் வளர்ந்துவரக்கூடிய அரசியல் நிலைமைகள் பற்றி குறிப்பாக இருதரப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டன.
தேர்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை, அதன்பொருட்டு கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ள வழிமுறைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றியும் தோன்றியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முதலில் அரசியல் உறுதிநிலையை நாட்டில் உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசியல் துறையில் வேகமாக வளர்ந்துவந்து மக்கள் மத்தியில் பிரபல்யத்யத்தையும் கவர்ச்சியையும் அடைகையில் கடைப்பிடித்த வழிமுறைகள் மற்றும் அமைப்பாண்மைப் கட்டமைப்புகள் தொடர்பிலும் சீனத் தூதுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பல்வேறு மக்கள் குழுக்கள், சமூக அடுக்குகள் மற்றும் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடன் நிலவுகின்ற உறவுகள், நாட்டைக் கட்டியெழுப்புகையில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள், கட்சிக் கட்டமைப்புகள் பற்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இவ்வேளையில் சீனத் தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை, சமூக கலாசார உறவுகள் மற்றும் ராஜதந்திர உறவுகளை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மேலும் வளர்த்துக்கொள்வது மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கையில் மேற்படி உறவுகளைப் பிரயோகிக்கக்கூடிய விதங்கள் பற்றியும் இருதரப்பினருக்கும் இடையில் மேலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இச் சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான ஷன் ஹய்ன், சீன கம்யூனிஸ கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் லின்தோ, கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் கவுன்ஸிலர் சென் சியன்ஜியான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களித்தின் பணிப்பாளர் லி ஜின்யன், பிரதி பணிப்பாளர் வென் ஜின், பிரதி அமைச்சின் செயலாளர் ஜின் வன், கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் இரண்டாம் செயலர் ஜின் என்ஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சாங் குயு ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம்செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM