டோக்கியோ சீமெந்தின் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த விநியோகஸ்த்தர்கள் கௌரவிப்பு

Published By: Priyatharshan

23 Mar, 2017 | 05:07 PM
image

கடந்த 2016 இல் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த விநியோகஸ்த்தர்கள் அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்த விநியோகஸ்த்தர் மாநாட்டின் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தராக, யாழ்ப்பாணத்தின் சிட்டி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாமிடத்தை மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் விநியோகஸ்த்தர் பெற்றிருந்ததுடன் மூன்றாமிடத்தை மட்டக்களப்பு அகிலா ஹார்ட்வெயார் பெற்றிருந்தது.

நாடு முழுவதையும் சேர்ந்த 300க்கும் அதிகமான டோக்கியோ சீமெந்தின் சிறந்த விநியோகஸ்த்தர்கள் இந்த ஒன்றுகூடல் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இதில் 2016ல் சிறப்பாக தமது செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருந்த 175க்கும் அதிகமான விநியோகஸ்த்தர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி லங்கா பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த விநியோகஸ்த்தர் ஒன்றுகூடல் மாநாடுரூபவ் கடந்த ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை அணியினால் எய்தப்பட்டிருந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

டோக்கியோ சீமெந்து கம்பனி குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, ஒன்றுகூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றும் போது “எமக்கு எமது விநியோகஸ்த்தர் வலையமைப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைக்கிறது. வெற்றிகரமான எமது செயற்பாட்டில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எம்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்பதுரூபவ் நிறுவனத்துக்கு ஒப்பற்ற திறன் வளர்ச்சியை நோக்கி பயணிக்க உதவியிருந்ததுடன் உயர் தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தவும் உதவியாக அமைந்துள்ளது.

இவை அனைத்தும் சந்தையில் நாம் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றுக்கொள்ள உதவியாக அமைந்துள்ளதுடன்ரூபவ் சிறந்த தயாரிப்புகளையும் வெளியிட உதவியாக அமைந்துள்ளன. எமது பங்காளர்களை அழைப்பது என்பதை நாம் கௌரவமாகக் கருதுகிறோம். உங்களுடன் இணைந்து நாமும் வளர்வதற்கு நீங்கள் வழங்கி வரும் வலிமைக்கு நாம் நன்றி பகர்கிறோம்” என்றார்.

டோக்கியோ சீமெந்து கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது விநியோகஸ்த்தர் வலையமைப்பு என்பது எமக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக நாம் பதித்த உறுதியான அடித்தளத்தின் அடிப்படையில்ரூபவ் எமது நிலையை நாம் படிப்படியாக உயர்த்தி வளர்ந்து வருகிறோம். எமது வியாபாரத்தின் ஸ்தாபிப்பு அல்லது அவர்களின் வியாபார ஸ்தாபிப்பிலிருந்து பெருமளவான விநியோகஸ்த்தரகள் எம்முடன் கைகோர்த்துள்ளனர்.

எம் ஒவ்வொருவரின் வளர்ச்சியையும் நாம் கண்டுள்ளோம். இதன் காரணமாக அதிகளவு பிணைப்பைக்கொண்ட ஒரு குடும்பமாக நாம் அமைந்துள்ளோம். ஒவ்வொரு குடும்பத்தைப் போலவும் எமது வெற்றியை நாம் இணைந்து கொண்டாடுவோம். உங்கள் நேர்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்து நாம் திருப்தியடைகிறோம்.” என்றார்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த கருத்துத் தெரிவிக்கையில்,

“எம்மைப்பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது. எம்மால் பல இலக்குகளை எய்த முடிந்திருந்தது. திருகோணமலையில் எமது நான்காவது சீமெந்து அரைக்கும் ஆலை மற்றும் மொத்த சீமெந்து உற்பத்தி ஆலை ஆகியவற்றின் விஸ்தரிப்பு செயற்திட்டம் என்பது இதில் மாபெரும் ஒன்றாக அமைந்துள்ளது.

எமது உற்பத்தித்திறனை இரட்டிப்பாக்கியிருந்ததன் மூலமாகரூபவ் எமது தலைமைத்துவ நிலையை மாற்றிமைத்து உறுதி செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உங்களின் பங்களிப்பு எமக்கு அவசியம். இதை எம்மால் எய்த முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.

தனது விநியோகஸ்த்தர் வலையமைப்பை கௌரவிக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வெவ்வேறு நிகழ்வுகளில் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் ஒன்றாக அமைந்துள்ளது. ஏனைய நிகழ்ச்சிகளில் IFC இனால் முன்னெடுக்கப்படும் “திவி சக்தி” பயிற்சிப்பட்டறைகள் அடங்குகின்றன. சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு வியாபார உத்திகள் பற்றிய விளக்கங்களை வழங்கும் வகையில் இந்த பயிற்சிப்பட்டறைகள் அமைந்துள்ளன. இந்த நிகழ்ச்சியானதுரூபவ் சகல டோக்கியோ சீமெந்து விநியோகஸ்த்தர்களுக்கும் அவசியமான ஆளுமைகள் மற்றும் அறிவை பெற்றுக்கொடுப்பதுடன் தமது வியாபாரத்தை குடும்ப நிலையிலிருந்து தொழில்முயற்சியாண்மை நிலைக்கு மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமைந்துள்ளன. இந்த செயற்பாடுகளினூடாக, நிறுவனத்தின் மூலமாக சுமார் 30 வருடகால உறவுகள் விநியோகஸ்த்தர்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன்ரூபவ் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல ஏதுவாக அமைந்துள்ளன.

இலங்கையின் நிர்மாணத்துறையில் உயர் தரம் வாய்ந்த சீமெந்து மற்றும் கொங்கிறீற் கலவை விநியோகஸ்த்தர் எனும் கீர்த்தி நாமத்தை டோக்கியோ சீமெந்து சம்பாதித்துள்ளது. இலங்கையின் வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டங்களுக்கு அவசியமான உயர் தர பொருட்களை வழங்குவதில் நிறுவனம் முக்கிய பங்கை வகிப்பதுடன்ரூபவ் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளிலும் தனது பங்களிப்பை நிறுவனம் வழங்கிய வண்ணமுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31