உமா ஓயா திட்டத்தைத் திறந்துவைக்க இன்று இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி

Published By: Vishnu

24 Apr, 2024 | 01:31 AM
image

(நா.தனுஜா)

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதன்கிழமை (24) இலங்கை வருகிறார். 
இன்று காலை அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி, அங்கிருந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித்திட்டத்தை திறந்துவைத்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு சந்திப்பை நடாத்தவுள்ள ஈரான் ஜனாதிபதி, பின்னர் நாடு திரும்பவுள்ளார். 
ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும். 
உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் அதனைத்தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத்தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது. 
இத்திட்டத்தின்கீழ் புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது. அங்கிருந்து 15.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது. இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  
அதன்படி இத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காக இலங்கைக்கு வருகைதரவிருக்கும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு உமா ஓயா திட்டத்தைத் திறந்துவைத்தன் பின்னர், அன்றைய தினமே அவர் நாட்டிலிருந்து புறப்படுவார் எனவும் அறியமுடிகின்றது. 
அதேவேளை ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அமெரிக்கத்தூதரகம் அதனை மறுத்திருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கௌரவ” என்று விளிப்பதா? இல்லையா? -...

2026-05-20 15:45:32
news-image

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின்...

2026-05-20 15:44:36
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான்...

2026-05-20 15:38:05
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06