சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரீகர்ககளால் போடப்படும் கழிவுப்பொருட்களால் சுற்றாடல் மாசடைகின்றது என சுற்றாடல் அதிகாரி தெரிவிக்கின்றார்.
இவ்வருட ஆரம்பமான சிவனொளிபாத பாதமலை யாத்திரை காலத்தில் நல்லதண்ணியிலிருந்து - சிவனொளி பாத மலைக்கு செல்லும் வீதியில் உள்ளூர் யாத்திரிகர்களால் 25 தொன் மக்காத திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
அவற்றில் 03 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளது என மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் (2023/2024) சிவனொளிபாத மலை பருவகாலம் ஆரம்பித்து 5 மாதங்களில் நல்லதண்ணி - சிவனொளிபாத மலை செல்லும் வழித்தடத்தில் இருந்து யாத்திரைக்கு வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சுமார் 25 தொன் மக்காத திண்மக் கழிவுகளை சுற்றாடலில் வீசி சென்றுள்ளனர்.
இதில் சுமார் 03 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் மட்டுமே உள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி ரசிகா சமரநாயக்க தெரிவித்தார்.
05 மாதங்களாக தொடரும் பருவகால நிகழ்வின் போது மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சுற்றாடல் பிரிவினாரால் நல்லதண்ணி - சிவனொலி பாத மலை வீதி மற்றும் நல்லதண்ணி நகர வீதிகளில் தேங்கும் மக்காத திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.
2023 டிசம்பரில், சிவனொலி பாத மலை யாத்திரை காலம் தொடங்கியதில் இருந்து, வார இறுதி நாட்களிலும், வார நாட்களிலும் அதிக எண்ணிக்கையிலான யாத்திரீகர்கள் வருகை தருவதால், மக்காத தின்மக்கழிவுகள் மற்றும் அகற்றப்படும் குப்பைகளின் அளவு அதிகமாக உள்ளது என்று சுற்றுச்சூழல் அதிகாரி மேலும் கூறினார்.
இக்கழிவுகள் யாவும் பிரதேச சபையின் பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பின்னர் மஸ்கெலியா, ரிக்கட்டான் பகுதியில் நிறுவப்பட்டுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த ஆண்டு சிவனொலி பாத மலை பருவகாலம் முடிய இன்னும் ஒரு மாதம் உள்ளது.எதிர் வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிறைவு பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM