மிரிஸ்ஸ, தாழறம்பை கடல் பகுதியில் அனுமதியின்றி கடல்வாழ் முலையூட்டிகளை புகைப்படமெடுத்த 4 வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கண்ணாடி இழைப்படகு ஒன்றும் நீருக்கடியில் புகைப்படமெடுக்க பயன்படும் கமெரா, டிஜிட்டெல் கமெரா, 5 சோடி டைவிங் துடுப்புகள், 6 டைவிங் முகமூடிகள் ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் மிரிஸ்ஸ பகுதியிலுள்ள வனவிலங்கு அதிகாரிகளிடம்  மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.