(நெவில் அன்தனி)
சோவியத் யூனியனின் சேர்ஜி பப்காவுக்குப் பின்னர் உலக கோலூன்றிப் பாய்தலில் வரலாறுக்கு மேல் வரலாறு படைத்து வருபவர் சுவீடன் தேசித்தின் ஆமண்ட் டுப்லான்டிஸ் ஆவார்.
சீனாவில் ஸியாமெனில் நடைபெற்ற வருடத்தின் ஆரம்ப டயமண்ட் லீக் தொடரின் கோலூன்றிப் பாய்தலில் டுப்லான்டிஸ் எட்டாவது தடவையாக உலக சாதனை நிலைநாட்டினார்.
அப் போட்டியில் 6.24 மீட்டர் உயரத்தை தனது முதலாவது முயற்சியிலேயே தாவிய டுப்லான்டிஸ் தனது சொந்த சாதனையை எட்டாவது தடவையாக புதுப்பித்துள்ளார்.
இயூஜினில் கடந்த வருடம் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் நிலைநாட்டிய 6.23 மீட்டர் என்ற உயர சாதனையையே இப்போது டுப்லான்டிஸ் புதுப்பித்துள்ளார்.
சீனாவில் இந்த புதிய சாதனையை டுப்லான்டிஸ் மிகுந்த நம்பிக்கையுடனும் எவ்வித சிரமமும் இன்றியும் நிலைநாட்டினார்.
அப் போட்டியில் தனது முதலாவது தாவுதலை 5.62 மீட்டர் உயரத்திலிருந்து ஆரம்பித்த டுப்லான்டிஸ், இரண்டாவது தாவுதலை 5.82 மீட்டரில் நிறைவு செய்தார். இந்த இரண்டு உயரங்களையும் அவர் தனது முதலாவது முயற்சியிலேயே தாவி பாராட்டுதல்களைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து 6 மீட்டர் உயரத்தில் குறுக்குக் கம்பம் வைக்கப்பட்டது.
அந்த உயரத்தை டுப்லான்டிஸ் முதல் முயற்சியிலேயே தாவியதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்கரான சாம் கெண்ட்றிக்ஸ் 3 முயற்சிகளிலும் கோட்டை விட்டார்.
அதன் பின்னர் போட்டியில் மிஞ்சியிருந்த ஒரே ஒருவரான ஆமண்ட் டுப்லான்டிஸ் தனது முந்தைய சொந்த சாதனையான 6.23 மீட்டர் உயரத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
என்னே ஆச்சரியம்! டுப்லான்டிஸ் எவ்வித சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் 6.24 மீட்டர் உயரத்தையும் முதல் முயற்சியிலேயெ தாவி புதிய உலக சாதனை படைத்தார்.
35 தடவைகள் உலக சாதனையைப் புதுப்பித்த சேர்ஜி பப்காவைப் போன்று சாதனைகளின் எண்ணிக்கையை டுப்லான்டிஸ் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்.
அவர் ஒவ்வொரு தடவையும் சாதனையை புதுப்பிக்க முயற்சிக்கும்போது தனது முந்தைய சாதனையைவிட ஒரு மீட்டர் கூடுதலான உயரத்துக்கே குறிவைக்கிறார்.
டுப்லான்டிஸ் 6.24 மீற்றர் உயரத்தைத் தாவியபோது 6.29 மீட்டர் உயரத்தில் இருந்ததாக பதிவாளர்கள் கணிப்பிட்டுள்ளனர். இதற்கு அமைய பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி டுப்லான்டிஸ் சாதிப்பார் என நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM