தாய்வானின் கிழக்கு கடற்கரையில் திங்கட்கிழமை இரவு ஆரம்பித்து செவ்வாய் அதிகாலை வரை 6.3 ரிச்டர் அளவில் 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாய்வானின் தலைநகர் தாய்பேயில் நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் குலுங்கியுள்ளது.
நிலநடுக்கம் தாய்வானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியன்னை மையமாகக் கொண்டிருந்துள்ளது.
அங்கு கடந்த 3 ஆம் திகதி 7.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, 14 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து தாய்வானில் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
Hualien இல் உள்ள தீயணைப்புத் துறை செவ்வாயன்று அதிகாலையில், ஏப்ரல் 3 ஆம் தேதி ஏற்கனவே சேதமடைந்த ஒரு ஹோட்டல் இப்போது செயல்பாட்டில் இல்லை என்று கூறியது.
எனினும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
புவியின் 2 டெக்டானிக் தகடுகள் சந்திக்கும் இடத்தில் தாய்வான் உள்ளமையினால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்.
2016 ஆம் ஆண்டு தெற்கு தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, 1999 இல் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM