இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக் கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

23 Apr, 2024 | 11:50 AM
image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகத்தில் ஒருவர்திஹகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காலி இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபராவார்.

இவருக்கு எதிராக வாகன திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் நீதிமன்றில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திஹகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கைக் கணினி, 6 கையடக்க தொலைபேசிகள் , 8 வங்கிக் கணக்கு அட்டைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக் கூறி பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்களின் பணத்தைத் தனது வங்கிக் கணக்கில் பெற்று பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்காக இவர் முகநூல் மற்றும் வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரை நேற்று (22) மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக திஹகொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-01-22 06:30:28
news-image

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக...

2025-01-22 05:07:19
news-image

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை...

2025-01-22 05:02:53
news-image

குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக...

2025-01-22 04:52:42
news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,032...

2025-01-22 04:47:32
news-image

கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே...

2025-01-22 04:44:54
news-image

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும்...

2025-01-22 04:39:52
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21