பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

23 Apr, 2024 | 02:18 PM
image

பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.

இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக்கு நீரிணை கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய, இலங்கை இருநாட்டு அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்று நேற்று திங்கட்கிழமை  (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.

இங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் நீந்த  தொடங்கினர்.

அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு மாரடைப்பு  காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, கோபால் ராவ் உடல் தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரத்திலுள்ள வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-01-16 16:22:14
news-image

கல்கிசையில் போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர்...

2025-01-16 16:04:53
news-image

யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய...

2025-01-16 16:02:32
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர்...

2025-01-16 15:54:24
news-image

அநுராதபுரத்தில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

2025-01-16 15:48:33
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்...

2025-01-16 15:36:57
news-image

யாழில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு -...

2025-01-16 16:18:03
news-image

அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க புதிய காரியாலயம்...

2025-01-16 15:24:01
news-image

கொஹுவலையில் துப்பாக்கிச் சூடு

2025-01-16 15:26:05
news-image

பாதாள உலக கும்பலின் தலைவரான “பொடி...

2025-01-16 15:04:00
news-image

ஜனாதிபதி தேர்தல் குறித்த இறுதி அறிக்கை...

2025-01-16 15:03:08
news-image

மலையக பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை...

2025-01-16 16:18:49