கம்பஹா படல்கம, காசிவத்த பகுதியில் வழி தவறிச் சென்ற மூதாட்டி ஒருவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு படல்கம பொலிஸார் உதவி செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்தவர் தம்மிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியாவார்.
இவர் கம்பஹா படல்கம, காசிவத்த பகுதியில் வழி தவறிச் சுற்றித்திரிந்த போது அதனை அவதானித்த பிரதேவாசிகள் இது தொடர்பில் படல்கம பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூதாட்டியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணையில் இவர் கேகாலை பிரதேசத்திலிருந்து கம்பஹா படல்கம பிரதேசத்திற்கு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், படல்கம பொலிஸ் நிலையத்திலிருந்த அதிகாரி ஒருவர் தான் இதற்கு முன்னர் இந்த மூதாட்டியை தம்மிட்ட பிரதேசத்தில் வைத்துக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மூதாட்டியின் முகவரியைக் கண்டறிந்த பொலிஸார் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, இந்த மூதாட்டி கடந்த சில நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகவும் அவரது உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM