தாவரங்களுக்குப் பயன்படுத்தும் ஒருதொகை  உரத்தை சட்டவிரோதமாக கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இருவரும் ஒருதொகை உரத்துடன் உடப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒவ்வொன்றும் 100 கிராம் நிறையுடைய 4 ஆயிரத்து 205 உரப்பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் இறக்குமதி, விற்பனை மற்றும் பாவனைக்கு தடைசெய்யப்பட்ட உரவகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார், கல்பிட்டி ஊடக கடல்மார்க்கமாக நாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த உரவகையை பாவனைக்குட்படுத்துவதால் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.