இலங்கையின் உயர்கல்வி கட்டமைப்பில், நீண்டகாலமாக தலைமையை வகிக்கும் ICBT கெம்பஸானது, அதனது University of Sunderland இன் வருடாந்த பழைய மாணவர் கூட்டத்தை கொழும்பு கிங்க்ஸ்பெரி ஹோட்டலில் பெருமையுடன் நடாத்தியது. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய University of Sunderland இன் பிரதிநிதியாக இரு தசாப்தங்களிற்கும் மேலாக சேவையாற்றும், ICBT கெம்பஸானது, இந்நன்கறியப்பட்ட ஐக்கிய இராச்சிய நிறுவகத்திலிருந்து தரமான உயர் கல்வியை பெற்றுக்கொண்ட பல்லாயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு அடித்தளமாக விளங்கியது.
சமீபத்தில் நிறைவுபெற்ற பழைய மாணவர் சந்திப்பானது பட்டாதரிகளிற்கு மீளவும் தொடர்புரவும், அவர்களது பகிரப்பட்ட அனுபவங்களை கொண்டாடவும், மற்றும் வலுவான வலையமைப்பினை பேணவுமாக துடிப்பானதொரு மேடையயை அமைத்துத்தந்தது. இப்பழைய மாணவர்களில் பலர் இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலுமான நிறுவனங்களில் செல்வாக்குமிக்க பதவிகளை வகிப்பதானது,
பன்முகப்பட்ட கற்கைநெறிகளுடனான ICBT - Sunderland பங்குடைமையின் வெற்றியை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
கார்டியன் பல்கலைக்கழக வழிகாட்டி 2024இல் சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள, University of Sunderland ஆனது, அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டிணைவுடன் உலகில் முன்னணி ஆய்வுகளை வழங்கி, கல்வி தரத்தினில் 125 வருட பாரம்பரிய பெருமையினை கொண்டுள்ளது. ICBT கெம்பஸ் ஊடாக, பல்கலைக்கழகமானது வியாபார முகாமைத்துவம், தாதியப் பயிற்சி, இயந்திர பொறியியல், மின் மற்றும் மின்சாதன பொறியியல், தன்னியக்க பொறியியல் மற்றும் வலையமைப்பு முறைமை பொறியியல் முதலியன உள்ளடங்களாக, பல்வேறு பாடப்பரப்புக்களில் பலவிதமான மட்டங்களில் இளநிலை மற்றும் பட்டப்பின் கற்கைகள் என்பவற்றை வழங்குகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM