திருமண உறவு முறிவுக்குப் பிறகு தமிழ் திரையுலகில் தொடர்ந்து அழுத்தமான வேடங்களில் நடித்து தன் கலைச் சேவையை அயராது தொடரும் நடிகை சோனியா அகர்வால் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'பிஹைண்ட்' . இப்படம் வெளியாகி அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துமா..? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் அமன் ரஃபி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிஹைண்ட்' எனும் திரைப்படத்தில் சோனியா அகர்வால், ஜினு ஈ. தாமஸ், மினு மோல், மரினா மைக்கேல், நோபி மார்க்கோஸ், சினோஜ் வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. சமீர் முகமது இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முரளி அப்பாதத், ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாவகுட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷிஜா ஜினு தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தாய் ..தனது குழந்தைக்கு அமானுஷ்யமான முறையில் ஆபத்து வந்திருப்பதை உணர்கிறாள். ஆனால் குழந்தைக்கு ஆபத்து வந்திருப்பதை அந்த பெண்மணியின் கணவன் ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான். தாய் தன்னுடைய குழந்தை ஆபத்தில் இருப்பதை உணர்ந்து காப்பாற்ற போராடுகிறாள். ஒரு புள்ளியில் கணவனும் இதை உணர்ந்து கொள்கிறான். குழந்தையை ஆக்கிரமிக்கும் அந்த தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாக போராடுகிறாள். அவள் தனது குழந்தையை மீட்டாரா? இல்லையா? என்பதும்... அந்த ஆபத்தில் பின்னணி குறித்தும் விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை'' என்றார்.
தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM